Saturday, May 4, 2013

ஆட்டோ டிரைவர்- கொன்றது ஏன்

பெண் டாக்டரை கொலை செய்த ஆட்டோ டிரைவர்- கொன்றது ஏன்? -
http://tamil.oneindia.in/news/2012/01/03/tamilnadu-auto-driver-murdered-lady-doctor-tuticorin-aid0175.html
தூத்துக்குடி மருத்துவர் கொலை பற்றி இந்தச் செய்தியில் இருக்கும் தகவல்களை வைத்து என் யூகங்கள்.

6 மாத கர்பிணிப் பெண்ணிற்கு திடீரென்று கை கால் வீக்கம் வந்தால், அவருக்கு கற்பகால உயர் இரத்த அழுத்தம் (Pregnancy-induced Hypertension, pre-eclampsia) இருக்க வாய்ப்புகள் அதிகம். அப்படி இருந்தாலே தாய், செய் இருவரின் நலனுக்கும் கெடுதல். அந்தப் பெண்ணைப் பரிசோத்தித்துப் பார்த்து குழந்தை இறந்து விட்டது என்று மருத்துவர் சொல்லியிருக்கிறார். இறந்த குழந்தையை வெளியே எடுக்க அறுவை சிகிச்சைதான் செய்யவேண்டும். இதுதான் சிகிச்சை. அதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, தாய்க்கு வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது எக்ளாம்ப்சியா (eclampsia) என்ற அந்த நோயின் இயல்பு. உலகில் எந்த நாட்டில் கர்பிணிப் பெண்ணுக்கு எக்ளாம்ப்சியா வந்தாலும் அது உயிருக்கு ஆபத்துதான். உடனே அந்தப் பெண்ணை வேறு மருத்துவமனைக்கு அனுப்பியுருக்கிறார் மருத்துவர்.
துரதிஷ்டவசமாக அந்தப் பெண் இறந்து விட்டார். இதற்காக மருத்துவரை கொலை செய்தது நியாயமா?
குழந்தையை வெளியே எடுக்கவில்லையென்றால் தாய்க்கு எக்ளாம்ப்சியா வலிப்பு வந்து உயிருக்கு ஆபத்து வரும் என்ற ஐயத்தில்தான் அறுவை சிகிச்சை அவசரமாகச் செய்திருப்பார்கள். உலகத்தில் எங்கிருந்தாலும் இதுதான் முதற்கட்ட சிகிச்சை. இதில் மருத்துவர் செய்திருக்கக்கூடிய தவறுகள் மிகச்சிலவே. அவைகளில் முக்கியமானது, சூழ்நிலையின் முக்கியத்துவத்தையும், அவசரத்தையும், அபாயத்தையும் சரியாக விவரிக்காமல் போனது.
இன்னொரு தவறு - அது இனிமேல் இந்த மாதிரி சூழ்நிலையைச் சந்திக்கும் அனைத்து மருத்துவர்களும் நினைவு கூறவேண்டியது - இந்த மாதிரியான இக்கட்டான நிலைமையில் தங்களிடம் வரும் நோயாளிகளை அவர்களுக்கு சிகிச்சை செய்யும் அனைத்து வசதிகளும் இல்லை என்றால் உடனடியாக அந்த வகையான வசதிகள் இருக்கும் பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பரிந்துரைக்க வேண்டும்.
ஆயிரத்தில் ஒருவருக்கு நேரும் அசம்பாவிதம் இதனால் நூற்றில் ஒருவருக்கு ஏற்படும். அதை மக்கள் சகித்துக் கொள்ள வேண்டும்.
-Vijay @scanman 3rd January 2012 from Twitlonger

No comments:

Post a Comment