இது என்னோட காமெடி ட்விட்லாங்கர் இல்ல ..புல் செண்டிமெண்ட் ட்விட்லாங்கர்.. நீங்க படிக்கணும்னு அவசியம் இல்ல..
காலேஜ் லைப் முடிய போகுது...அதுக்கு தான் இந்த லாங்கர்....(எனக்கு பிளாக் எழுத புடிக்காது அதான் ட்விட்லாங்கர் )
படிச்சா வெளியூர்ல தான் படிப்பேன்ன்னு இங்க சிதம்பரத்துல வந்து சேர்ந்தேன் ..நான் 9th ல இருந்து hostel student தான்..அதனால homesick பிரச்சனை எனக்கு அதிகமா வராது..நான் 90 % எடுக்குற student கிடையாது ..எங்க அம்மா அப்பா வும் அப்படி என்ன வளர்க்கல ..(அவ்வ )75 % தான் ..(இத ஒரு விளம்பரத்துக்கு தான் சொன்னேன் அவ்வ )நான் ரொம்ப அதிகமா பேசுவேன் எப்பவும்..ஆனா பொண்ணுங்க கூட பேச மாட்டேன் அவ்வளவா..(believe மீ )..கூச்சம் ..first year ல
mechanical ,civil ,cse ,ece ,eee ,IT ..எல்லாத்தையும் ஒரே கிளாஸ்ல போட்டாங்க..(பொண்ணுங்க இல்ல எல்லாரும் பசங்க தான் )அதனால first year ல நல்ல friends கிடைச்சாங்க..குறிப்பா நான் பேசுற காமெடிக்கு எல்லாம் சிரிச்சிசாங்க ..பாபு (@chinnapulla )பாபுவும் நானும் ஒரே கிளாஸ் கிடையாது..hostel பழக்கம்..பாபுவ பால்வாடி ன்னு தான் சொல்லுவேன்..ரொம்ப homesick அவனுக்கு வாரம் ஆனா வீட்டுக்கு போய்டுவான் இப்பவும்..
நான் வந்து ஒருத்தர் கூட சண்டை போட்டா அப்புறம் அவங்களா வந்து பேசுற வரைக்கும் பேச மாட்டேன்..இதனால நிறைய நல்ல friends இழந்திருக்கேன் வாழ்கையில ..இப்ப வரை ..ஆனா பாபு எனக்கு நேர் opposite ..உடனே வந்து பேசிடுவான்..
சங்கர் என் ரூம் மேட் என் ஊரு..எப்பவும் கட்டிங் போட்ட மாதிரி இருக்கும் அவன் மூஞ்சி..காமெடியான விஷயத்தை கூட ரொம்ப சீரியஸா பேசுவான்..உதயா ..மதுரை..வாழ்கையில எவளோ சோகம் இருந்தாலும் மூஞ்சில காட்ட மாட்டான்..எப்பவும் சந்தோசமா இருப்பான்..துரை ..திண்டுக்கல் ..20 வயசுல மூளை மட்டும் அஞ்சு வயசு..எப்பவும் குழந்தை தனமா தான் இருப்பான் ..ராமபாண்டி .சேம் ஆண்டர்சன் xerox ,மாதிரி இருப்பான்..பிரசாந்த் ,தமிழ் ,புகழ்..ராஜேஷ் .தங்கம்,சந்தோஷ் ,விஜய் குமார்,கபிலன் ,ஆண்டனி ,வேலு ,ஹரிஷ் ,பிரபாகரன் ,தாமு ,ரமேஷ் ...எப்பவும் எனக்காக என்ன அட்ஜஸ்ட் பண்ணி என்கூடவே இருப்பாங்க..எனக்கு பீலிங்க்ஸா பேசவும் தெரியாது..அத காட்டவும் தெரியாது..இந்தா மாதிரி அவங்கள பத்தி நான் எழுதுனேன்ன்னு சொன்னா கூட நம்ப மாட்டாங்க...இன்னும் ஒரு மாசத்துல எல்லாம் முடிய போகுது..இவங்கள எல்லாம் மறுபடியும் பார்ப்பனான்னு கூட தெரியாது..
இங்க படிச்சத விட கத்துகிட்டது தான் அதிகம்..
போதும்...bye ..
Link
No comments:
Post a Comment