Friday, June 27, 2014

போய்க்கிட்டே இருப்போம்
elavasam · @elavasam

 27th Jun 2014 from TwitLonger

@orupakkam படிச்சா நல்லது

ட்விட்லாங்கர் எழுதி ரொம்ப நாள் ஆச்சு எழுதிட வேண்டியதுதான். போன தபா ட்விட்லாங்கர் போட்டதும் இவருக்கேதான்னு நினைச்சா புரிதல் பிரச்னை எங்க இருக்குன்னு தெரியுது. இருக்கட்டும். 

உங்க பிரச்னை என்ன? பதாகை என்ற இணைய இதழில் வந்த ‘கவுஜை’ ஒண்ணைக் கிண்டல் பண்ணி ஒரு அனானி பதில் கவுஜை எழுதி இருக்காரு. ஆபாசமான வார்த்தைகளைப் போட்டு எழுதி இருக்காரு. எழுதினது மட்டுமில்லாம அண்ணன் ஒருபக்கத்துக்கு அட்டுப் போட்டு அதை ட்விட்டி இருக்காரு. ஒரிஜினல் கவுஜ நம்மளுது இல்லை, சரி அது நமக்குப் பிடிச்ச கவுஜயாவே இருக்கட்டும். அதுக்குப் பதிலா வந்தது பிடிக்கலையா? என்ன செய்யணும்? அந்த அனானியை ப்ளாக் பண்ணிட்டு நம்ம கொதிப்பை கண்ட்ரோல் (சரியா படிக்கணும் வெறும் ட்ரோல் இல்லை) பண்ண ரெண்டு ட்வீட் போட்டுட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போகணும். கொதிப்பு ஜாஸ்தியா ட்விட்லாங்கரோ ப்ளாக் போஸ்ட்டோ கூடப் போடலாம். செஞ்சாச்சா, அதைத் தாண்டிப் போய்க்கிட்டே இருக்கணும். 

ஏன்யா, பஸ் ஸ்டாண்டில் ஒருத்தன் வந்து ரவுசு பண்ணினா, ரெண்டு சத்தம் போடணும். நகர்ந்து போகணும். அதை விட்டுப்புட்டு அவனுக்குச் சரியா களத்தில் இறங்கினா அவனுக்குத்தானேய்யா வசதி. அதைத்தானே அவன் எதிர்பார்க்கறான். வெள்ளைக்காரன் பாஷையில் சொன்னா You are playing into his hands by engaging. அதை ஏன்யா செய்யறன்னு கேட்டா அதைக் கேட்கறதுதான் தப்புன்னு விவாதம். 

சரி, அப்படி அந்த அனானி மேட்டர்தான் என்ன? ஒரிஜினல் கவுஜ ஓடு ஓடு ஓடுன்னு ஆரம்பிச்சுது. மொக்கக் கவுஜதான். இவரு அதை ஓலு ஓலுன்னு மாத்தி எழுதிட்டாப்டி. நான் முழுசாப்படிக்கலை. மொத்தக் கவுஜையும் ஆபாசம் விரசம்ன்னு முழுசாப்படிச்ச அண்ணன் சொல்லறாரு. சொன்னா சரியாத்தான் இருக்கும். எல்லா சினிமாப்பாட்டுக்கும் அப்படி ஒரு வெர்ஷன் இருக்குடே. ரஜினிக்கும் கமலுக்கும் சண்டைன்னு ஆரம்பிச்சு பாட்டு எழுதின பரம்பரை. அப்படித்தேன் இருப்பான். ஒரிஜினல் கவுஜையைப் படிச்சப்போ எனக்குத் தோணுன மொத வரியும் அதாண்டே. நான் எழுதலை அவன் எழுதிட்டான். அவனை எழுதாதேன்னு சொல்ல நாம யாரு? 

நமக்கு அதை ஆபாசம்ன்னு சொல்ல எவ்வளவு உரிமை இருக்கோ அதை எழுத அந்தப் பயலுக்கும் உரிமை இருக்கு. என் டைம்லைனில் வரக்கூடாதுன்னு சொல்லலாம். ப்ளாக் பண்ணலாம். தொடர்ந்து இம்சை குடுத்தா ரிப்போர்ட் பண்ணலாம். ஒரு அட்டுப் போட்டு எழுதினது அப்யூஸாய்யா? டோண்டு சார் (May his soul rest in peace) பட்டது அப்யூஸ். அது மாதிரி நடந்தாச் சொல்லுங்க. நான் உங்களோட நின்னு சண்டை போடறேன். அதை விட்டுட்டு இந்த அல்ப மேட்டரை எல்லாம் அப்யூஸ்ன்னா என்னாய்யா அர்த்தம்? அதை எதிர்த்து நீ என்னோட நிக்கலை, அதைக் கண்டிக்கலை இது பண்ணலை அது பண்ணலைன்னா? மிடிலை சாரே! 

இது ஆபாசம், இது உன் குழந்தைகள் படிக்கலாமா? இதுதான் உங்கள் விழுமியமா? பாஸ் பாஸ் கொஞ்சம் நிறுத்துங்க. என் நண்பர்களோட நான் பேசினா ஓத்தா, வாட் தி பக் வராமல் எனக்குப் பேசத் தெரியாது. அதுவே பசங்களோடப் பேசினா வராது. என் பையனுக்கு அந்த வார்த்தைகள் தெரியாதா? தெரியும். ஆனாலும் நாம பேசறது இல்லை. எதை எங்க கொண்டு போகணுமோ அங்க கொண்டு போகணும். அதை விட்டுட்டு எல்லா இடத்திலேயும் ஒரே அளவுகோலோடத் திரியறது அபத்தம். 

இது உங்க பிரச்னை. நீங்க பொங்குங்க. என் பிரச்னை, இங்க ஸ்கேனையும் சேர்த்துக்கறேன். எங்க பிரச்னை இது இல்லை. 

தொடர்ந்து உங்களை எதாவது ஜாலியாகக் கிண்டல் பண்ணினா உடனே இந்த அனானியோட தொடர்பு படுத்திப் பேசறதுதான் உங்க வழக்கமா இருக்கு. ஏன்னு கேட்டாச்சு பதில் இல்லை. அதில் நேற்று போட்ட ட்விட்டுகளைப் பார்த்தால் என்னமோ நாங்களே அந்த அனானி அக்கவுண்ட் ஓனர் என்ற ரேஞ்சுக்குப் போட்டாச்சு. அதை ஏன்னு கேட்டா அதுக்கு நேரா பதில் சொல்லலை. அந்த பேட்டர்ன் அப்படி இருக்கு இந்தப் பேட்டர்ன் இப்படி இருக்குன்னு குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டறதே பொழப்பாப் போச்சு. நேத்து அத்தனை பேரு என்னை நீதானாடா அந்த அனானின்னு உங்க ட்வீட்டைப் படிச்சுட்டுக் கேட்டாங்களே. அதுக்கு யாரு காரணம்? ஒட்டு மொத்தமா அத்தனை பேருமா தப்பாப் புரிஞ்சுப்பாங்க. 

paranoid - சொல்லிக்கிட்டது நீங்க. மூத்திரச் சந்துக்கு இழுத்துக்கிட்டுப் போறதாச் சொன்னது நீங்க. அப்புறம் I have been careful, show proofந்னு கேட்டதும் நீங்க. சுட்டியைக் குடுத்தாலும் அதைக் கண்டுக்காம, அதுக்குப் பதில் சொல்லாம மேல மேல வேற எதையோவும் பேசிக்கிட்டுப் போறது நீங்க. உங்களுக்கு அனானியோட பிரச்னைன்னா நீங்க அதை டீல் பண்ணிக்குங்க. உங்க கூட இல்லை என்ற ஒரே காரணத்திற்காக நாங்கதான் அனானி என்ற ரேஞ்சில் எழுதிக்கிட்டே இருந்தா அது எந்த விதத்துல நியாயம்?அதைக் கேட்டா அதுக்கு நேரா பதில் வந்திருக்கா? என்னைச் சொன்னியான்னு கேட்டு பதில் வாங்கவே எட்டு ட்விட்டு ஆச்சு. இங்க திரும்ப அதுக்கு எல்லாம் சுட்டி குடுத்து ஆவணப்படுத்தறது என் நோக்கமில்லை. சொல்ல நினைச்சதைச் சொல்லியாச்சு. 

ஊருல ஆயிரம் அனானி இருப்பான். அவனவன் ஆயிரம் பேசுவான். நம்ம வழியை பார்த்துக்கிட்டுப் போறது உசிதம். உங்க பிரச்சனைக்குக் கோதாவில் குதிக்கலைன்னு கூட இருக்கிறவனை எல்லாம் குத்தறது ரொம்பவே அபத்தம். அனானி அசிங்கமாப் பேசறதை விட கூட இருக்கிறவனைப் பத்தி நீங்க மறைமுகமாப் பேசறதுதான் ஆபாசம். அதுக்கு எல்லாம் உங்க விழுமியத்தில் இடமிருக்கு போல. உங்களுக்குத்தான் தெரியும்.

கடைசியில் நீங்க என்னை அன்பாலோ பண்ணிட்டீங்க நல்லது. நான் பண்ணலை. உணர்ச்சிகள் எல்லாம் கட்டுக்குள்ள வந்த பின்னாடி யோசிச்சுப் பாருங்க. நட்பு வேணுமானா வாங்க. இல்லையா ரெண்டு பேருக்குமே பெருசா லாஸ் ஒண்ணும் இல்லை. போய்க்கிட்டே இருப்போம்

No comments:

Post a Comment