Thursday, June 26, 2014

திருக்குடந்தை

anbudan BALA · @AmmU_MaanU

 26th Jun 2014 from TwitLonger


(ராமானுஜன் படம் வாயிலாக ”பிரபல”பாடலாசிரியார் ஆனா :)) திருமழிசையாழ்வாரின் திருச்சந்தவிருத்தப் பாசுரங்கள் சந்தக் கலி விருத்தம் வகையைச் சார்ந்தவை. ஒவ்வொரு பாசுரத்தையும், ஒரே மாதிரியான இசை மீட்டர் கொண்ட 8 பகுதிகளாக பிரிக்க முடியும்.... முரசு கொட்டலுக்கு இணையான, ஒரு வித துள்ளலான மெட்டொலியில் ஒதும்போது, இசை நயம் மிகுந்திருக்கும். நேர்ப்பொருள் எளிதாக பிடிபட்டாலும், பல பாசுரங்கள் நுட்பமான ஆழமான உட்பொருள் கொண்டவை!!!!

1.கங்கை நீர் பயந்த பாத- 2.பங்கயத்து எம் அண்ணலே! 
3.அங்கை ஆழி சங்கு தண்டு 4.வில்லும் வாளும் ஏந்தினாய் !
5.சிங்கமாய தேவதேவ 6.தேன் உலாவு மென் மலர்- 
7.மங்கை மன்னி வாழும் மார்ப 8.ஆழி மேனி மாயனே! 

1. விண் கடந்த சோதியாய் 2. விளங்கு ஞான மூர்த்தியாய்
3.பண் கடந்த தேசம் மேவு 4. பாவநாச நாதனே
5. எண் கடந்த யோகினோடு 6. இரந்து சென்று மாணியாய்
7. மண் கடந்த வண்ணம் நின்னை 8. யார் மதிக்க வல்லரே? 

சங்கு தங்கு முன் கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்கம் மங்க அன்று சென்று அடர்த்து எறிந்த ஆழியான்
கொங்கு தங்கு வார் குழல் மடந்தைமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே!

1.ஊனின் மேய ஆவி நீ 2.உ றக்கமோடு உணர்ச்சி நீ
3.ஆனில்மேய ஐந்தும் நீ 4.அவற்றுள்நின்ற தூய்மை நீ
5.வானினோடு மண்ணும்நீ 6.வளங்கடற்பயனும் நீ
7.யானும் நீ அதன்றியெம் 8.பிரானும் நீ இராமனே.

நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே 

குடந்தை (கும்பகோணம்) கிடந்த பெருமாளையே, எப்படி நம்ம ஆழ்வார் ”எழுந்திருந்து பேசு வாழி கேசனே ”ன்னு மிரட்டாறார் பாருங்க :-) 

திருக்குடந்தை ஆராவமுதப் பெருமானும், பக்திஸாரர் என்றும் போற்றப்படும் திருமழிசை ஆழ்வாரின்,"எழுந்திருந்து பேசு வாழிகேசனே!" என்ற சொல்லுக்குக் கட்டுப்பட்டு, பாதி கிடக்க/பாதி எழுந்த அத்திருக்கோலத்திலேயே (தலையைச் சற்று உயர்த்தி வலது கையை மடக்கி, தூக்கிய தலையைத் தாங்கிக் கொள்ளும் கோலத்தில்) இன்றும் (உத்தான சயனம்) அருள் பாலிக்கிறான்!

No comments:

Post a Comment